news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இன்றைய விளையாட்டுத் தகவல்கள்
tv

Also Watch

tv

Read this

இன்றைய விளையாட்டுத் தகவல்கள்

அஷ்வின்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி :

43ஆவது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர், சீனாவில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, தன்வி ஷர்மா, மாள்விகா பான்சோத் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இன்று தொடங்கும் ஆசிய பேட்மிண்டன் தொடர், வரும் 12ஆம் தேதி நிறைவடையும்.

ஐபிஎல் 2025 சீசன் குறித்த மனக்குமுறலை கொட்டிய அஷ்வின் : 

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தான் கழித்த சீசன் தனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்ததாக, அந்த அணியின் முன்னாள் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

தன்னை விடுவிப்பதா? தக்க வைப்பதா? என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான், தானே ஒய்வை அறிவித்ததாகவும், தனது விலகலால் சிஎஸ்கேவுக்கு கிடைக்கும் 10 கோடியில் நல்ல வீரர்கள ஏலம் எடுப்பார்கள் என நம்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியுடனான ஆட்டத்துக்கு முன்பு சி.எஸ்.கே-வில் இணையும் தோனி : 

டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, எம்.எஸ். தோனி மற்றும் டிவால்ட் பிரெவிஸ் இருவரும், சென்னை அணியில் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாக தோனி பங்கேற்காத முதல் 3 போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியை தழுவிய நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில் தோனிக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்பட இருப்பதாகவும், முடிவுகள் சாதகமாக இருந்தால் அடுத்த ஆட்டத்தில் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.

மீண்டும் அணிக்கு திரும்பிய மும்பை கேப்டன் ஹர்திக் : 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது..! உடல்நிலை பாதிப்பு காரணமாக டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

அந்த போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், உடல்நலம் தேறிய பாண்டியா இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தரைப்பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம்

1
2 hrs 23 mins agoshare
தர்மபுரி தேர்தல் புறக்கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved