உத்தரபிரதேசத்தில், ஒருவரின் வயிற்றில் 26 கரண்டி, 19 டூத்பிரஷ் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காஜியாபாத்தின் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின். மதுபோதைக்கு அடிமையான இவர், மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது வலியால் துடித்து அவருக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு வயிறு வலி என கூறிய சச்சினுக்கு, ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் 29 கரண்டிகளும், 19 பிரஷ்களும் இருப்பதை பார்த்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சச்சின் வயிற்றில் இருந்த பிரஷ், கரண்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. வயிற்றுக்குள் எப்படி கரண்டி சென்றது? என விசாரித்தபோது, மறுவாழ்வு மையத்தில் வழங்கப்பட்ட உணவு போதாதால், கோபத்தில் அங்கிருந்த பொருட்களை விழுங்கியதாக கூறி, சச்சின் அதிர்ச்சி அளித்துள்ளார். மறுவாழ்வு மையத்தில் உணவுகள் வழங்காமல் இருப்பதால் கரண்டியை விழுங்கிய, மதுபோதை ஆசாமியின் இந்த செயல் கேட்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.