news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 180+ தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் - லோக்போல்
tv

Also Watch

tv

Read this

180+ தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் - லோக்போல்

அதிமுக, தவெக சேர்ந்து 53% வாக்குகள்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு லோக்போல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணிக்கு...
திமுக கூட்டணி 180க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும், 40 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணிக்கு 38 முதல் 42 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு என்றும், 29 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக போட்டியிடும் விஜயின் த.வெ.க. 8 முதல் 10 தொகுதிகளை கைப்பற்றக் கூடும் என லோக்போல் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மற்றும் தவெக சேர்ந்து சுமார் 53 சதவீத வாக்குகளை அறுவடை செய்யும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

கருத்துக்கணிப்பு வெளியீடு
இதுகுறித்து கருத்துக்கணிப்பில் கூறி இருப்பதாவது;

* வரும் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணி 181 முதல் 189 இடங்கள் வரை வெல்லும். 40.10% வாக்குகளுடன் 189 இடங்கள் வரை திமுக வெல்லும்.

* 29% வாக்குகளுடன் 38 முதல் 42 இடங்களை அதிமுக கைப்பற்றும்.

* தவெக 23.9% வாக்குகளுடன் 8 முதல் 10 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்பு

* அதிமுகவை விட 11%க்கும் அதிகமான வாக்குகளை திமுக பெறும்

* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு நிலவுகிறது. விடியல் பயணம், காலை உணவு திட்டம் போன்றவை கிராமப்புற, சிறு நகர பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. அரசின் திட்டங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியான முன்னிலையை கொடுக்கிறது.

* இபிஎஸ் தலைமையிலான அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது.
அதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள பிளவு, முக்கிய தலைவர்கள் கட்சி மாறியது போன்றவை தொண்டர்களின் மன உறுதியை சிதைத்துள்ளது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும்


* முதலமைச்சராக மு.க.ஸ்டாலினே தொடர வேண்டும் என 41% பேர் ஆதரவு அளித்து உள்ளனர். திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை பரவலாக இல்லை.

இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
போட்டி கடினமாக தான் இருக்கும் என சுந்தர்.சி பேட்டி

போட்டி கடினமாக தான் இருக்கும் என சுந்தர்.சி பேட்டி

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செய்தி எதிரொலியாக கால்நடை பராமரிப்புத் துறையினர் ஆய்வு

0
0 min agoshare
கோழி பண்ணை பிரச்சனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved