வாக்குரிமையை பறிக்காத தேர்தல் சீர்திருத்தத்தை என்றுமே எதிர்த்தது கிடையாது என்று, திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ விளக்கம்.S.I.R. நடவடிக்கையை தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு.திமுக BLO-2க்களுக்கு மட்டும் S.I.R. கணக்கீட்டு படிவங்கள் கொடுக்கப்படுவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைக்கு புறம்பானது என திமுக குற்றச்சாட்டு.குளறுபடிகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக S.I.R.-ஐ அதிமுக வரவேற்பதாகவும் என்.ஆர்.இளங்கோ புகார்.S.I.R. படிவங்களை பூர்த்தி செய்ய B.L.O.க்கள் எனப்படும் வாக்குச்சாவடி திட்ட அலுவலர்களே திணறுவதாக என்.ஆர்.இளங்கோ பேட்டி.படிவங்களை நிரப்புவதில் அதிமுகவினரும் பெருமளவில் பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தகவல்.இதையும் பாருங்கள் - "SIR பணிகளில் குளறுபடி" என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு | SIRIssue | NRIlango | DMK