மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வகையில், அரசியலமைப்பை திருத்தும் வரை ஓய மாட்டோம் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்த விளக்கங்கள், ஆளுநருக்கு எதிராக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஏப்ரல் 8, 2025ல் பெற்ற தீர்ப்பின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளார். சொல்லப் போனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது, மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது என்பதை தான் உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதையும் பாருங்கள் - மத்திய அரசை கண்டித்து திமுக அடுத்த போராட்டம் | PoliticalProtest | Dmk | CentralGovernment