ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற நடிகர்கள் அனைவரும் வியாபார பங்கீட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புரியவில்லை எனக் கூறி உறுப்பினர்கள் சிலர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தீர்மானங்கள் மீண்டும் வாசிக்கப்படும் என அறிக்கப்பட்டதால் அமைதி நிலவியது. தொடர்ந்து, திரைப்படங்களில் நடித்துக் கொண்டு OTT சீரீஸ்களில் நடிக்க செல்லும் நடிகர்களுக்கு, இனி ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையும் பாருங்கள் - தயாரிப்பாளர் சங்கத்தில் உச்சகட்ட வாக்குவாதம் | ProducersCouncil | FilmIndustryNewsஅரசியல் கட்சி மாதிரி ஆயிடுச்சு - ஆதங்கத்தை கொட்டிய தயாரிப்பாளர் | ProducerALAlagappan