news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு
tv

Also Watch

tv

Read this

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

இபிஎஸ் அறிவிப்பு

44

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

அதிமுக கூட்டணியில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தை, மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.

இபிஎஸ் டில்லி பயணம்
சில நாட்களுக்கு முன்னர் தலைநகர் டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் அமித்ஷாவை சந்தித்தார்.

பியூஷ்கோயல் வருகை
இந்த நிலையில், இன்று மார்ச் 23ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி உடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர்.


யார் யாருக்கு எவ்வளவு?

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்...
பாஜக - 27
அன்புமணி தலைமையிலான பாமக - 18
அமமுக - 11
தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்று இரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Related Link
ஒரே நாளில் 2 முறை விலை சரிவு

ஒரே நாளில் 2 முறை விலை சரிவு




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
7 hrs 26 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved