பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவா ஜியாகுன், மாறாக, இது பேரிடர் தடுப்பு மற்றும் காலநிலை எதிர்வினை ஆகியவற்றுக்கு உதவும் என்று கூறினார்.