பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதுக்கு தகுதி பெற்றுள்ள கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 'நாயகன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்களுக்கு செட் அமைத்த தோட்டா தரணிக்கு இந்தாண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில், ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணிக்கு வாழ்த்துக்கள் என்றும், அரசுக் கல்லூரியில் பயின்று ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.