டெல்லியில் நடைபெற்ற 71ஆவது தேசிய திரைப்பட விருதுகளை மோகன்லால், ஷாருக்கான், ஊர்வசி பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசால் திரைக் கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான 71ஆவது தேசிய திரைப்பட விருதை டெல்லியில் உள்ள விக்யான் பவனில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கானுக்கும், 12 பெயில் படத்துக்காக விக்ராந்த் மாஸேவுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. மிசஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்துக்காக ராணி முகர்ஜி விருது பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான விருது எம்.எஸ்.பாஸ்கர், திரைக்கதை ஆசிரியருக்கான விருதை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றனர். வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார். சிறந்த தமிழ் படத்துக்கான விருது பார்க்கிங் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ்க்கு வழங்கப்பட்டது. மலையாளத்தில் உள்ளொழுக்கு படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த வரிசையில் தாதா சாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.இதையும் பாருங்கள்; தேசிய விருதை பெற்ற பின் M.S.பாஸ்கர் முதல் பிரஸ்மீட் | Parking | Harish Kalyan | MSBaskarஇதையும் பாருங்கள்; முதல் படத்தில் முதல் விருது 'பார்க்கிங்' பட இயக்குநர் ராம் குமார் பேட்டி| Parking Movie