கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கட்டண உயர்வை குறைப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சமூக வலைதளத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணிப்போம் என பெங்களூரு வாசிகள் ஹேஷ்டாக் ட்ரெண்ட் செய்த நிலையில் கட்டண உயர்வில் 30 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.