பீகார் மாநிலத்தில், பெண்கள் வாக்குகளை அதிகமாக அறுவடை செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றி பெற்றதாக தகவல்.தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பெண்களுக்கான முக்கிய திட்டம் கை கொடுத்திருக்கலாம் என்று, கணிப்பு.டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பீகார் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் கோலாகலம்.அலுவலகத்திற்கு வந்த பிரதமர் மோடி மீது கலர் காகிதங்களை பறக்கவிட்டு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கும் முடிவை அறிவித்தது தேர்தல் ஆணையம்.தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றிபெற்று அசத்தல்.பீகாரில் அமோக வெற்றியுடன் ஆட்சியைத் தக்கவைத்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி.கருத்துக்கணிப்புகளைத் தாண்டி அதிக இடங்களில் வெற்றி.பாஜக 89 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளையும் கைப்பற்றி அபாரம்.இரு கட்சிகளும் தலா 101 இடங்களில் போட்டியிட்ட நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி. இதையும் பாருங்கள் - Bihar | Maithili Thakur | 25 வயதில் MLA கன்னி தேர்தலில் வெற்றி போஜ்புரி பாடகி to இளம் அரசியல்வாதி