கேரளாவில், ஆம்லேட் உடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு மாவட்டம், பெந்தியடக்கா பகுதியை சேர்ந்த விஷாந்த் என்பவர், கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவர், சாலையோர உணவகத்தில் இருந்து ஆம்லேட் வாங்கி அதை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. சிறிது நேரத்தில் விஷாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் காசர்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, வாழைப்பழம் தொண்டையில் சிக்கி தவித்தவருக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும், விஷாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது தொண்டையில் ஆம்லேட் மற்றும் வாழைப்பழம் சிக்கி இருந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இறந்தவரின் மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.