கேரளாவில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது மற்றொரு கார் அதிவேகமாக மோதிய விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியில் காரில் சென்றவர்கள், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில், சாலையோரம் நின்றிருந்த கார் அருகில் இருந்த வீட்டின் மீது மோதியது.