news-tamil-logo

3/23/2026, 2:46:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கீடு
tv

Also Watch

tv

Read this

அதிமுக கூட்டணியில் 3 கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியோடு ஒப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்

Posted on: Mar 23, 2026 11:56 AM

17

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக கூட்டணியில், சொந்த சின்னங்களில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எண்ணிக்கை முடிவு செய்யப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்பட உள்ளது. திமுக கூட்டணியில் 5 சீட்டுக்கு மார்க்சிஸ்ட், திருமாவளவன் அலையோ அலையென அலைகிறார்கள் என்றும், எங்கள் கூட்டணியில் காலையில் வந்தார்கள், மதியம் இறுதி செய்து, மாலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது என்றும், இபிஎஸ் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

210 இடங்களில் வெற்றி
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
அதிமுக நிச்சயமாக 210 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக தலைவர், அதன் கூட்டணி தலைவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு எங்களை விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் டெல்லி சென்றால், திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலினுக்கு வாடிக்கையாக உள்ளது. நான் டெல்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்.

உணர்வுப்பூர்வமான கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி உணர்வுப் பூர்வமான கூட்டணி. இன்று இரவுக்குள் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து அறிவிக்கப்படும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணி இதில் தெளிவாக உள்ளது.
இவ்வாறு இபிஎஸ் தெரிவித்தார்.

Related Link
தவெகவில் 234 தொகுதிக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?

தவெகவில் 234 தொகுதிக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துர்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் தொற்று ஏற்படும் அபாயம்

0
15 mins agoshare
NAGORE Darga








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved