news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மது போதை ஆசாமி அட்டகாசம்
tv

Also Watch

tv

Read this

மது போதை ஆசாமி அட்டகாசம்

கொளத்தூர் - சென்னை

26

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் 100 அடி சாலையில் போக்குவரத்து காவலர்கள் வழக்கம் போல வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர், காரில் வந்த நபர் மது அருந்தி இருக்கின்றாரா என மது போதை பரிசோதனை செய்யும் பிரீத் அனலைசர் கருவியை கொண்டு சோதனை செய்ய முற்பட்டார்.


மின்னல் வேகத்தில் தப்ப முயன்ற ஆசாமி

அப்பொழுது காரின் கண்ணாடியை திறந்து கார் ஓட்டுநர் போக்குவரத்து காவலரின் அந்த மது போதை பரிசோதனை செய்யும் கருவியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி செல்ல முயன்றார். அப்போது போக்குவரத்து காவலரின் இடது கை அந்த காரின் கண்ணாடியில் மாட்டிக் கொள்ள அவரையும் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

போலீசுக்கு போக்குகாட்டிய மதுபோதை ஆசாமி கைது

இதனை கண்ட பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் துரத்திச் சென்று அந்த காரை மடக்கி போக்குவரத்து காவலரை மீட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மதுபோதை ஆசாமியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவரது பெயர் பிரவீன் குமார் என்றும் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது

Related Link
எம்.பி.கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டு

எம்.பி.கார்த்தி சிதம்பரம் குற்றம்சாட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 3 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved