இந்த ஆண்டு இறுதிக்குள் மெட்டா நிறுவனத்தில் இதுவரை மனிதர்கள் செய்து வந்த சில வேலைகளை AI மூலம் செய்ய முயற்சிக்க இருப்பதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்திருப்பது, IT ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மென்பொருள் பொறியாளர்கள் செய்து வந்த கடினமான கோடிங் பணிகளை, AI மூலம் செய்ய முயற்சி செய்து வருவதாக மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.