திருப்பதியில், ரசிகரின் ஆசையை நிறைவேற்றி வைத்த நடிகர் அஜித் குமாரின் செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜித்குமார், திரையுலகில் தனது AK64 படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் பிசியாக இருக்கும்போதே, மற்றொரு பக்கம் கார் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் என்று, தனது தனிப்பட்ட திறமையிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அஜித் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது, ஒரு ரசிகருக்காக அவர் செய்த செயல், இணையத்தில் வைரலாகி, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. திருப்பதியில், அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின்போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள், "தல, தல" என்று சத்தமாக கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். உடனே, கோயிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார்.இந்த நிலையில், சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அஜித்குமார், அங்கிருந்த ரசிகர்களைக் கடந்து செல்லும்போது ஒரு ரசிகர் தன் கையில் இருந்த செல்போனை அஜித்திடம் காட்டியவாறு, தனக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது என்றும், அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். உடனே அஜித்குமார், மற்றவர்கள் யாரையும் போட்டோ எடுக்க அனுமதிக்காத நிலையில், உடனே அந்த ரசிகரின் செல்போனை வாங்கி, செல்பி எடுத்துக் கொடுத்திருக்கிறார். இந்தக் காட்சி வீடியோவாக வெளியாகி, பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.இதையும் பாருங்கள்... "என்னால வாய் பேச முடியாது" சைகையில் சொன்ன ரசிகர்.. உடனே அஜித் செய்த செயல் | AjithViralVideo