news-tamil-logo

3/19/2026, 4:23:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.08 லட்சம்
tv

Also Watch

tv

Read this

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.08 லட்சம்

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

Posted on: Jan 20, 2026 05:23 AM

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலை வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டதால், ஏழை, எளிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னையில், 22 காரட் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டது. காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 என உயர்ந்தது. இதே போல வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்தது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. கடந்த சில மாதங்​களாகவே, தங்​கத்தின் விலை அதிகரித்து வரு​கிறது. சில நேரங்​களில் தங்கம் விலை குறைந்​து, மீண்​டும் உயர்​ந்தும் வருகிறது.

கடந்த வார விலை நிலவரம்

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 16ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்திருந்தது. ஒரு சவரன் ரூ.1,05,840 என விற்பனை ஆனது. இந்நிலையில், விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்​து, ரூ.1,07,600 ஆக இருந்தது.

இன்று காலை நிலவரம்
இந்நிலையில், சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று ஜனவரி 20ஆம் தேதி காலை நிலவரப்படி, ஒரு கிராமுக்கு ரூ.160 என உயர்ந்து, ரூ.13,610க்கு விற்​பனை ஆனது. சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,08,880-க்கு விற்பனை ஆனது.
வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி ஒரு கிரா​முக்கு ரூ.12 உயர்ந்து, ரூ.330க்​கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து, ரூ.3,30,000க்​கும் விற்​பனை ஆனது.

இதையும் பாருங்கள் - இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் வெளிநடப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 36 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved