கேரளா மாநிலம் கண்ணூரில் பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தில் 150 வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கண்ணூரில் இருந்து இரிட்டியை நோக்கி லட்சுமி என்ற தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. கூத்தப்புழா பகுதியில் பேருந்தை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, பயணிகள் சீட்டுக்கடியில் 150 வெடிகுண்டுகளை மறைந்து வைத்து எடுத்து சென்றதை போலீஸார் கண்டுபிடித்தனர். வெடிகுண்டு எடுத்து சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.