"வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி."வரும் 5ஆம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை மறுநாள் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது .இன்று கேரளா மற்றும் மாஹே மற்றும் கடலோர கர்நாடக வில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. மேலும் கடலோர கர்நாடகா, உள் கர்நாடகா, கேரளா, மாஹே, லட்சத்தீவு, ஆந்திரப் பிரதேசம், ஏனாம், தெலுங்கானா, ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளின் அடுத்த ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குஜராத் மாநிலத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதே போல மேற்கு மத்திய பிரதேசத்தில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.