ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு 42 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் டீசல் டேங்கில் ஓட்டை ஏற்பட்டு தீப்பிடித்ததில் சுமார் இருபது பேர் உயிரிழந்தனர். தீப்பிடித்தவுடன் பேருந்திற்குள் இருந்த ஒயர்கள் கருகியதால் தானியங்கி கதவை திறக்க இயலாமல் போனதாக கூறப்படுகிறது. ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியேறிய 21 பயணிகள் மட்டுமே உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 பேர்களின் உடல்கள் எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டுள்ளதாக கூறிய போலீசார், ஓட்டுநர்களில் ஒருவர் தப்பியதாகவும், மற்றொருவரிடம் விசாரணை நடப்பதாகவும் கூறி உள்ளனர்.