ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் கராச்சி விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், குறைந்தது 8 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தை ஆய்வு செய்த சிந்து மாகாண உள்துறை அமைச்சர் உல் ஹசான் லஞ்சர், விமான நிலையம் அருகே டேங்கர் லாரி வெடித்தததாக தெரிவித்தார். எனினும், டேங்கர் லாரி வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன்பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.