மகளிர் டி20 உலகக்கோப்பையின் 9வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் அடித்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19வது ஓவரிலேயே 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.