ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கட் தன்னோட 2வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தாரு. தொடக்கம் முதலே அதிரடியா விளையாடி வந்த பென் டக்கட் 13 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள்னு பந்தை நாலா புறமும் பறக்கவிட்டு 107 ரன்கள் எடுத்திருந்தப்ப ட்ராவிஸ் ஹெட் பந்துவீச்சுல அவுட் ஆனாரு. இதுவரை விளையாடிய 16 ஒருநாள் போட்டிகள்ல 2 சதம் விளாசி இருக்கும் பென் டக்கட் அந்த இரண்டு சதமுமே இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்துலயே விளாசி இருக்காரு.