news-tamil-logo

3/19/2026, 8:43:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home news மகா மாரியம்மன் கோயிலில் 5 தலை நாக வாழை... ஐந்து தலை நாகம் போல் வளர்ந்துள்ள வாழை குலை
tv

Also Watch

tv

Read this

மகா மாரியம்மன் கோயிலில் 5 தலை நாக வாழை... ஐந்து தலை நாகம் போல் வளர்ந்துள்ள வாழை குலை

ஐந்து தலை நாகம் போல் வளர்ந்துள்ள வாழை குலை

Posted on: Mar 18, 2025 01:41 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த காருகுடியில் மகா மாரியம்மன் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அங்கு ராகு கேது நாக தோஷம் நிவர்த்தி ஸ்தலமாக உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள தோட்டத்தில் வாழை மரங்கள உள்ளன.

அதில் திருமணத்தடை நிவர்த்திக்கு ராகு கேது நாக தோஷங்கள் நிவர்த்தி செய்ய வாழை மரத்தில் தாலி கட்டி பரிகாரம் செய்யபட்டு வருகிறது. அது போல பரிகார நிவர்த்தி செய்யப்பட்ட ஒரு வாழை மரத்தில் நடந்த ஒரு ஆன்மீக அதிசய நிகழ்வு பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக வாழைமரங்களில் இலைக்கு மேல் இருந்தே குலை தள்ளுவது வழக்கம். வாழைத்தார் கீழ் நோக்கியே வளர்ந்து வாழைக்காய், கனியாக மாறும்.ஆனால் இந்த கோவிலில் உள்ள வாழை மரத்தின் நடுவில் இருந்து குலை வெளிவர துவங்கியுள்ளது.

வாழைப்பூ, வாழைத்தார் ஆகியவை மேல் நோக்கி வளர்கின்றன. அதுவும் ஐந்து தலை நாகம் போல ஐந்து காய்களை கொண்டு உருவாகி உள்ளது வளைந்து மேல் நோக்கிய வண்ணம் உள்ள இந்த அதிசய வாழை மரத்தை அப்பகுதி மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

மேலும் அந்த வாழை மரத்திற்கு மஞ்சள் துணி அணிவித்தும் பூக்கள் சாற்றி வழிபட்டு செல்கின்றனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
3 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved