Also Watch
Read this
Posted on: Nov 06, 2025 12:36 PM
By: Web Team

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன்களில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2, 3ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா மாறி மாறி வெற்றி பெற, தொடர் 1க்கு1 என சமனில் இருந்தது.
நான்காவது போட்டி இன்று, கோல்டு கோஸ்ட்டில் உள்ள கர்ராரா மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. துவக்க வீரர்களான அபிஷேக் சர்மா, சுப்மன் கில் நல்ல துவக்கம் கொடுத்தனர்.
அபிஷேக் சர்மா 28 ரன்களும், சுப்மன் கில் 48 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினார்கள்.
அடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே 22 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அக்சர் பட்டேல் ஒரளவு விளையாடி 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி, 20 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து, 168 ரன்கள் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மிச்சல் மார்ஷ், மேத்தீவ் சார்ட், நல்ல துவக்கத்தை தந்தனர். பின்னர், துபே வீசிய பந்தில், மிச்சல் மார்ஷ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து, மேத்தீவ் சாரட் 25 ரன்களில் அக்சர் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். அக்சர் பட்டேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி, 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் இந்திய அணி, 48 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி, 2க்கு 1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையும் பாருங்கள் - 4ஆவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி | India vs Australia | T20 Cricket Match
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved