தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை, நடுக்கடலில் வைத்து, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி 35 மீனவர்களை கைது செய்தனர். 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகு காரைக்கால் பகுதியைச் சேர்ந்தது என்றும், ஒரு விசைப்படகு நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தது என்றும் ஒரு நாட்டுப்படகு ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.இதையும் பாருங்கள் - தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம் | Fishers | Sri Lankan