டாக்டர் ஃபேமிலி எனக்கூறி ஹவுஸ் ஓனர் ஃபேமிலியுடன் நெருக்கம். வாடகைக்கு வந்த இரண்டே வாரத்தில் ஹவுஸ் ஓனரின் மகனையும், மகளையும் சென்னையை சுற்றி பார்க்க அழைத்துச் சென்ற போலி டாக்டர் பேமிலி. மார்டன் டிரஸ்சுக்கு கோல்டு நகைகள் அணியக்கூடாது எனக்கூறி சிறுமியிடம் இருந்து நகைகள், செல்போன்கள், பணத்தை சுருட்டிவிட்டு நேக்காக எஸ்கேப். 7 மாதங்கள் கண்ணில் சிக்காமல் இருந்த போலி டாக்டர் ஃபேமிலி தற்போது சிக்கியது எப்படி? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என 3 மாநிலங்களை சேர்ந்த மனைவிகளுக்கு கணவரான போலி டாக்டர் செய்த கேடி வேலையின் பின்னணி என்ன?* மாலில் உள்ள உடை மாற்றும் அறைக்கு சென்ற சிறுமி* புது மார்டன் ஆடை அணிந்த மகிழ்ச்சி* மாலில் யாரையோ தேடி அலைந்த சிறுவன் மற்றும் சிறுமிமார்டன் டிரஸ் போடப்போறோம்ங்குற சந்தோஷத்துல தனியார் மால்ல உள்ள உடை மாற்றும் ரூமுக்குள்ள போயிருக்காங்க ஒரு சிறுவனும், சிறுமியும். டிரஸை அணிஞ்சிக்கிட்டு வெளியே வந்த ரெண்டுபேரும் சிலநிமிடங்களா யாரையோ தேடிருக்காங்க. மால் முழுக்க தேடியும் தாங்கள் தேடுற நபர்கள் இல்லாததால பதறுன சிறுவனும், சிறுமியும் அங்க இருந்த செக்யூரிட்டிகிட்ட சில விஷயத்த சொல்லிருக்காங்க. அடுத்து, அந்த செக்யூரிட்டி சொன்னபடி பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷன்ல ரெண்டு பேரும் போய் கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. அப்பதான், அந்த சிறுவர்களுக்கு என்ன நடந்துச்சுங்குறதே தெரியவந்துச்சு.* திருவண்ணாமலைக்கு சென்று வாடகை வீடு தேடிய ஜெகதீஷ்* டாக்டர் எனக்கூறியதால் யோசிக்காமல் வீடு கொடுத்த ஒருவர்* ஹவுஸ் ஓனர் ஃபேமிலியிடம் நெருங்கி பழகிய குடும்பம்சென்னையை சேர்ந்த ஜெகதீஷ், அவரோட மனைவி கீதா, மகள் நந்தினி ஆகிய 3 பேரும் கடந்த ஆண்டு ஜூன் மாசம் திருவண்ணாமலைக்கு போய் வாடகைக்கு வீடு தேடிருக்காங்க. தான் டாக்டரா இருக்குறதாகவும், டிரான்ஸ்பர்ல வந்துருக்குறதாகவும் ஜெகதீஷ் சொன்னதால, ஒரு ஹவுஸ் ஓனர் வேற எந்த கேள்வியும் கேக்காம தன்னோட வீட்ட வாடகைக்கு குடுத்துருக்காரு. பொதுவா ஃபேமிலியா வர்றவங்ககிட்ட ஹவுஸ் ஓனர் நல்லா பேசிப்பழகுறது வழக்கம்தான். அப்படிதான் ஜெகதீசோட ஃபேமிலிகிட்டயும் பேசிப் பழகிருக்காங்க. வாடகைக்கு வந்த ரெண்டே வாரத்துல ஹவுஸ் ஓனர் பேமிலிகூட ரொம்ப குளோஸ் ஆன ஜெகதீஸ் பேமிலி, சேர்த்து சமையல் பண்ணுற அளவுக்கு இருந்துருக்காங்க. அதேமாதிரி ஜெகதீசோட மகள் நந்தினியும் ஹவுஸ் ஓனரோட 16 வயசு மகள்கிட்ட பல வருஷம் பழகுன மாதிரி ரொம்ப நெருங்கிருக்காங்க. தினமும் பேக்கரிக்குப் போய் கேக், பஃப்ஸ், ஸ்வீட்ஸ், காரம்னு திண்பண்டம் வாங்கிட்டு வந்து ஹவுஸ் ஓனர்கிட்ட அவரோட மனசை குளிர வச்சிருக்காரு ஜெகதீஸ். ஆனா, அதுக்குப் பின்னால நடக்கப்போற விவகாரமே வேறனு பாவம் ஹவுஸ் ஓனருக்கும் அவங்களோட ஃபேமிலிக்கும் தெரியாமபோச்சு.* சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிய ஜெகதீஷ்* ஹவுஸ் ஓனரின் மகளை சென்னை அழைத்த ஜெகதீஷ் மகள்* சுற்றிப் பார்க்க போகலாம் என ஆசைவார்த்தை * டாக்டர் என கூறியதால், நம்பி தனது பிள்ளைகளை அனுப்பிய ஹவுஸ் ஓனர்சென்னையில ஒரு நிகழ்ச்சி இருக்குறதாவும், அதுல தன்னை CHIEF GUEST-ஆ கூப்ட்ருக்குறதாகவும் ஹவுஸ் ஓனர்கிட்ட சொன்ன ஜெகதீஸ், ஃபேமிலியையும் கூட அழைச்சிட்டு போகலாம்னு இருக்குறதா சொல்லிருக்காரு. அப்போ, அவரோட மகள் நந்தினி, ஹவுஸ் ஓனர் பொண்ணான சிறுமியோட பேரை சொல்லி என் பிரண்டை பிரிஞ்சி என்னால இருக்க முடியாது டாடி, அவளையும் அழைச்சிட்டு போகலாம்னு அடம்பிடிச்சிருக்காங்க. அய்யோ, அது எப்படி சிறுமியை நம்மகூட விடுவாங்க, அப்படியெல்லாம் அடம்பிடிக்க கூடாதுனு மகளை கண்டிச்சிருக்காரு டாக்டர். அப்போ, ஹவுஸ் ஓனரோட மகளும் நானும் சென்னைய பாத்ததே இல்ல அவங்களோட போகட்டுமானு தன்னோட அப்பாக்கிட்ட கேட்ருக்காங்க. அதெல்லாம் அவ்ளோ தூரம் அனுப்ப முடியாதுனு சொல்லிருக்காரு ஹவுஸ் ஓனர். அதுக்கு, அக்காகூட நானும் போறேனு சொல்லிருக்கான் ஹவுஸ் ஓனரோட மகன். முடியவே முடியாது அடம் பிடிக்காதீங்கனு தன் பிள்ளைகளை திட்டிருக்காரு ஹவுஸ் ஓனர். அப்போ, ஏன் திட்டுறீங்க? நாங்க கார்லதானே போறோம், எங்களோட அனுப்புங்க, சென்னைய சுத்தி காமிச்சிட்டு வர்றோம்னு சொல்லிருக்காரு ஜெகதீஸ். டாக்டர் என கூறியதால பெரும் மதிப்பும் மரியாதையும் வச்சிருந்த ஹவுஸ் ஓனர் தன் மகனையும், மகளையும் அவர்கூட அனுப்பி வச்சிருக்காங்க. அதுக்கு பின்னால டாக்டர்னு சொன்னவரும், அவரோட குடும்பமும் சேர்ந்து செய்யப்போற சூழ்ச்சிய பத்தி ஹவுஸ் ஓனருக்கு அப்போ தெரியல.* 16 சவரன் நகைகளை மகளிடம் கொடுத்தனுப்பிய ஹவுஸ் ஓனர்* சிறுவன்-சிறுமிக்கு மெரீனா பீச்சை சுற்றி காண்பித்த ஜெகதீஷ்* ஒரு மாலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் மற்றும் சிறுமி* மார்டன் டிரஸ்தான் அணிய வேண்டும் எனக்கூறிய ஜெகதீஷ்* நகை, பணத்தை ஜெகதீஷிடம் கொடுத்துவிட்டு சென்ற சிறுமிமகள் ஒரு நிகழ்ச்சிக்கு போறப்ப, கவரிங் நகைகள் அணிஞ்சிபோனா நாலுபேரு எப்படி மதிப்பாங்கனு நினைச்ச ஹவுஸ் ஓனர், கம்மல், செயின், வளையல், மோதிரம், நெக்லஸ், ஆரம்ன்னு 16 சவரன் தங்க நகைகளை குடுத்து அனுப்பிருக்காங்க. அதோட, ஜெகதீஸ்கிட்டயும் தன்னோட பொண்ணுக்கிட்ட நகைகள் இருக்குது பத்திரமா பாத்துக்கோங்கனு சொல்லிருக்காரு. அதுக்குப்பிறகு, ஹவுஸ் ஓனரோட மகள், மகன், ஜெகதீஸ், அவரோட மனைவி, மகள்னு 5 பேரும் கார்ல சென்னைக்கு போயிருக்காங்க. போறப்ப நல்ல சாப்பாடு, திண்பண்டம்னு வாங்கி குடுத்துருக்காரு. அடுத்து, சென்னை ரீச் ஆனதும் மெரீனா பீச்சுக்கு அழைச்சிட்டுப்போய் சுத்தி காமிச்சிருக்காரு. அங்க இருந்து ராயப்பேட்டையில உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூக்கு அழைச்சிட்டுப்போன ஜெகதீஸ், நாம கலந்துக்கப்போறது ராயலான ஒரு நிகழ்ச்சி அதனால மார்டன் டிரஸ்தான் போடணும்னு சொல்லி ஹவுஸ் ஓனரோட மகளுக்கு ஸ்லீவ்லெஸ்ல ஒரு மார்டன் டிரஸ்சும், ஹவுஸ் ஓனரோட மகனுக்கு கோட் சூட்டும் வாங்கி குடுத்து டிரயல் ரூம்லபோய் மாத்திட்டு வர சொல்லிருக்காரு ஜெகதீஸ். அந்த டிரஸ்ஸ பாத்ததும் குஷியான சிறுவனும், சிறுமியும் தங்களோட ரெண்டு செல்போன்களையும், பர்ஸ்ல இருந்த 5 ஆயிரம் ரூபாயையும் வச்சிருங்க, டிரஸ் மாத்திட்டு வரோம்னு சொல்லிருக்காங்க. அப்போ, மார்டன் டிரஸ்சுக்கு தங்க நகைகள் போட்டா செட் ஆகாதுனு சொல்லி சிறுமிகிட்ட இருந்த 16 சவரன் நகைகளையும் வாங்கிருக்காரு. அதுவும் சரிதான் பட்டிக்காடு மாதிரிதான் இருக்கும்னு நெனச்ச சிறுமியும் நகைகளை அவர் கையில குடுத்துட்டு போய்ட்டாங்க. * ஆடை அணிந்துவிட்டு வெளியே வந்த சிறுமிக்கு ஷாக்* ஜெகதீஷ், அவரது குடும்பத்தை காணாததால் அதிர்ச்சி* காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுமி மற்றும் சிறுவன்* மாலில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீஸ்* 7 மாதமாக கண்ணில் சிக்காத ஜெகதீஷ் குடும்பம்மார்டன் டிரஸ்ஸ மாத்திட்டு வெளிய வந்து பாத்தப்ப ஜெகதீஸ், அவரோட மனைவி, மகள்னு யாரையுமே காணோம். ஒருவேளை கழிவறைக்கு போய்ருப்பாங்க, இல்ல கடைக்கு போயிருப்பாங்கனு நினைச்ச சிறுவனும் சிறுமியும் மால் முழுக்க தேடிப் பாத்துருக்காங்க. ஆனா, அவங்க கண்டுபிடிக்க முடியல. அதுக்குப்பிறகுதான் அக்காவுக்கும், தம்பிக்கும் பதற்றமே வந்துருக்குது. கையில செல்போனும் இல்லாததால என்ன பண்றதுனு தெரியாம மால்ல இருந்த செக்யூரிட்டிகிட்ட சொன்னதோட, அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காங்க. அதுக்குப்பிறகு, சிறுமியோட அப்பாவுக்கும் காவல்துறை தரப்புல தகவல் குடுக்கப்பட்ருக்குது. அதுக்குப் பிறகு தான், ஹவுஸ் ஓனருக்கே ஜெகதீஸோட சுயரூபம் தெரியவந்துருக்குது. இதுக்கு இடையில, மால்ல இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை செக் பண்ணி விசாரணையில இறங்கிருக்காங்க போலீசார். அதேமாதிரி, அவரோட போட்டோவை எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பிருக்காங்க. ஆனாலும், கடந்த 7 மாசமா அவர பத்தின எந்த தகவலுமே காவல்துறைக்கு கிடைக்கவே இல்ல.* கொளத்தூரில் ஜெகதீஷ், அவரது மகளை கைது செய்த போலீஸ்* 3 திருமணங்கள் செய்து நகை மோசடியில் ஈடுபட்ட ஜெகதீஷ் * 3 மனைவிகளுடன் சேர்ந்து பலரை ஏமாற்றி நகை, பணம் மோசடி* வாடகை வீடுகளில் தங்கி நேக்காக பழகி திருட்டு வேலைஇதுக்கு மத்தியில, ஜெகதீஸ் கொளத்தூர் பகுதியில உள்ள ஒரு வீட்டுல தங்கி இருக்குறதா ஒரு தகவல் கிடைச்சிருக்குது. அதுக்குப்பிறகு அங்க வேகவேகமா வந்த போலீசார் ஜெகதீசையும், அவரோட மகள் நந்தினியையும் சுத்தி வளைச்சி கைது பண்ணி விசாரிச்சிருக்காங்க. அப்பதான், பல அதிர்ச்சி தகவல் வெளியவந்துருக்குது. டாக்டர்னு புருடாவிட்ட ஜெகதீஸ் உண்மையிலயே டாக்டர் கிடையாது. கேரளாவை சேர்ந்த சோனிங்குற பொண்ண முதல்ல கல்யாணம் பண்ணின புருடா டாக்டர் தன் மனைவிகூட சேர்ந்து திருட்டுல ஈடுபட்ருக்காரு. அடுத்து, சோனியை பிரிஞ்ச அவரு கோவையை சேர்ந்த கீதாவை கல்யாணம் பண்ணிருக்காரு. அதுக்குப்பிறகு 3 ஆவதா ஆந்திராவை சேர்ந்த ஸ்டெல்லாங்குற பொண்ண கல்யாணம் பண்ணிருக்காரு. ரெண்டு மனைவிகளையும் தன் வாழ்க்கையில பாட்னராக்காத ஜெகதீஸ் நூதன திருட்டுக்கு மட்டும் பார்ட்னராக்கிருக்காரு. ஒவ்வொரு பகுதியிலயும் வாடகைக்கு வீடு எடுத்து அங்க உள்ள பெண்களை தேர்ந்தெடுத்து அவங்ககிட்ட நட்பா பழகி நகைகளை பறிக்கிற வேலையில ஈடுபட்ருக்காங்க. ஒவ்வொரு மோசடிக்கும் ஒவ்வொரு மனைவிகளை உடந்தையா பயன்படுத்திருக்காரு.* பெரும்பாலும் பெண்களை குறிவைத்தே நகை மோசடி* மோசடியால் அடிக்கடி சிறைக்கு சென்று வந்த ஜெகதீஷ்* 200 சவரனுக்கு மேல் மோசடி செய்துள்ள ஜெகதீஷ் குடும்பம்* திருட்டு வேலைக்கு உடந்தையான ஜெகதீஷ் மனைவிகளை தேடிவரும் போலீசார்2015ல படப்பையில மீன் வியாபாரம் பாத்துட்டு இருந்த பெண்கிட்ட பேசிப்பழகி பியூட்டி பார்லர் அழைச்சிட்டுப்போய் 6 சவரன் நகை, செல்போன் பறிச்ச இந்த கேடி கும்பல் பூந்தமல்லியில பிரியாணி வியாபாரம் பாத்த ஒரு குடும்பத்தையும் தங்கள் பாசவலையில விழவச்சி 3 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் பறிச்சிருக்காங்க. சென்னையில மட்டும் சாஸ்திரி நகர், குரோம்பேட்டை, தாழம்பூர், தேனாம்பேட்டை, செம்பியம், வேளச்சேரின்னு கைவரிசை காட்டுன இந்த கேடி கும்பல் கோவை, திருச்சி, தருமபுரினு திருட ஊர் ஊரா வலம் வந்துருக்காங்க. 2017ல வேளச்சேரி போலீசாரால கைது செய்யப்பட்டு ஜாமின்ல வெளிய வந்த ஜெகதீஸ் அடுத்து ஆந்திரா, பெங்களூருலயும் சிறைவாசம் அனுபவிச்சிருக்காரு. திருட்டு பணத்துல கோவையில சொந்த வீடே கட்டிருக்காரு புருடா டாக்டர் ஜெகதீஸ். அதேமாதிரி, உஷாரா ஆன்லைன் மூலமா பணம் வாங்காம திட்டம்போட்டு காய் நகர்த்திருக்காரு. இந்த திருட்டு வேலைக்கே 50க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்திருக்காரு ஜெகதீஸ். இதுவரைக்கும் 200 சவரனுக்குமேல மோசடி பண்ணிருக்காரு கேடி டாக்டர். ஜெகதீசையும், அவரோட மகளையும் கைது பண்ண போலீசார் அவரோட ரெண்டு மனைவிகளையும் வலைவீசி தேடிட்டு இருக்காங்க. Related Link சூனியம் செய்ததாக சந்தேகம்