news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 2026 தமிழ்நாடு உரி'மை' யுத்தம்?
tv

Also Watch

tv

Read this

2026 தமிழ்நாடு உரி'மை' யுத்தம்?

வாக்காளப் பெருமக்களே...

28

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முன்னணி நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, 1977இல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய அரசியல் மாற்றத்துடன் ஒப்பிடப்படுகிறது. கடந்த காலத் தேர்தல் போக்குகளையும் தற்போதைய அரசியல் சூழலையும் அடிப்படையாகக் கொண்டு 2026 தேர்தலில் என்ன நிகழப்போகிறது என்பதை பற்றி விரிவாக பேசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

நான்கு முனை போட்டி உறுதி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம், கட்சிகளின் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சார வியூகங்கள், தேர்தல் வாக்குறுதிகள் என சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடப்பாண்டு தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.

எம்ஜிஆர், விஜய் - ஒற்றுமை, வேற்றுமை
இந்நிலையில், இதே போன்று திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆர்., புதுக்கட்சி தொடங்கியது போன்று நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகளை வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்க வேண்டியுள்ளது. 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுக முதன்முறையாகக் களம் கண்டு, 200 தொகுதிகளில் போட்டியிட்டு 130 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. நடிகர் விஜய்யின் அரசியல் வருகையும் இதே போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே நிலவுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்
எம்.ஜி.ஆர்., திமுகவில் இருந்த காலத்திலேயே பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றிருந்ததையும், அவர் 1967 மற்றும் 1971 தேர்தல்களில் பரங்கிமலை (St.Thomas Mount) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்ததையும் நினைவு கூர வேண்டியுள்ளது. விஜய்யும் தனது திரையுலக பிம்பத்தை அரசியல் வெற்றியாக மாற்ற முயலும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்தி 2006 தேர்தலில் நடிகர் விஜயகாந்தின் தேமுதிக 8.38% வாக்குகளைப் பெற்று மூன்றாவது சக்தியாக உருவெடுத்தது.

2011இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களை வென்று அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாகவும் உருப்பெற்றதும் தற்போது கவனம் பெறுகிறது. விஜய்யின் அரசியல் நுழைவு, தேமுதிக ஏற்படுத்தியதைப் போன்ற ஒரு கவனிக்கத்தக்க மாற்றத்தை உருவாக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தமிழக அரசியல்... திமுக மற்றும் அதிமுக
2026ல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மேலும் சில முக்கியக் காரணிகள், கடந்த 30 ஆண்டுகால தமிழக தேர்தல் வரலாற்றின் சுவடுகளில் தென்படுகின்றன. திராவிட சித்தாந்த அரசியலின் எழுச்சியான 1967 தேர்தலுக்கு பின் இருமுனைப் போட்டி, அதாவது தமிழக அரசியல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களைச் சுற்றியே சுழல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஒரு புதிய கட்சி இந்த வலிமையான கட்டமைப்பை உடைப்பது மிகப்பெரிய சவாலானதாக இருக்கும் என்பதே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?
இது மட்டுமன்றி, 1991 முதல் 2021 வரை, வலுவான கூட்டணிகளை அமைக்கும் கட்சியே ஆட்சியைப் பிடித்துள்ளது. 2016ல் அதிமுக எவ்வித பெரிய கூட்டணியும் இன்றி 134 இடங்களை வென்றது மட்டுமே இதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. 2016 தேர்தலில், மக்கள் நலக் கூட்டணி வாங்கிய 6.1% வாக்குகளும், பாமக பெற்ற 5.36% வாக்குகளும் திமுகவின் வெற்றியைத் தடுத்தன. இந்நிலையில், 2026-இல் விஜய்யின் கட்சி பிரிக்கும் வாக்குகள் யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என கூறப்படுகிறது.

தேர்தலுக்கு பிறகே தெரியவரும்
கடந்த 2021 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகத் திகழ்கிறது. கொங்கு மண்டலத்தில் 2021ல் அதிமுக சுமார் 70% இடங்களை வென்றது. சென்னை மற்றும் நகர்ப்புறங்களில் திமுக அசைக்க முடியாத வலிமையுடன் உள்ளது. விஜய்யின் வருகை இந்த மண்டலங்களில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தலுக்கு பிறகே தெரியவரும்.

தவெக - வாக்கு வங்கியை பாதிக்கும்
இதுதவிர மூன்றாம் சக்தியாக திகழும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தற்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வளர்ந்து வரும் சக்தியாகவும் மாறியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நகர்ப்புறங்களில் 2.5% வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அது கிட்டத்தட்ட திமுக கூட்டணியின் ஒரு அங்கமாக மாறி ஐக்கியமாகிவிட்டது. இதில் விஜய்யின் வருகை மூன்றாம் சக்திகளாக உள்ள கட்சிகளின் வாக்கு வங்கியைப் பாதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

திராவிடக் கட்சிகளுக்கு பெரும் சவால்
2026 தேர்தலில் விஜய் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க முடிந்தால், அது 1996 அல்லது 2011 தேர்தல்களில் ஏற்பட்டதைப் போன்ற ஒரு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கலாம் என கருதும் அதே நேரத்தில் பலமுனைப் போட்டி மற்றும் விஜய் கணிசமாக வாக்குகளை பிரித்தால், எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் 2006ல் திமுக சிறுபான்மை அரசு அமைத்தது போன்றே 2026லும் ஒரு தொங்கு சட்டமன்றம் அல்லது சிறுபான்மை அரசு அமைய வாய்ப்புள்ளது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்குச் சாதகமாக இருப்பது பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக மாறும் எனவும் கருதப்படுகிறது.



2026 தேர்தல் எப்படி இருக்கும்?
இறுதியாக, 1977இல் எம்.ஜி.ஆர். ஏற்படுத்திய மாற்றம் என்பது அவர் ஏற்கனவே ஒரு பெரும் அரசியல் இயக்கமான திமுகவின் ஒரு அங்கமாக இருந்து பிரிந்து சென்றதால் சாத்தியமானது. விஜய் நேரடியாகத் திரையுலகிலிருந்து வருவதால், அவர் 2006இல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தையோ அல்லது அதை விடப் பெரிய மாற்றத்தையோ ஏற்படுத்தலாம். இருப்பினும், சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளைக் கொண்ட திராவிடக் கட்சிகளின் அடித்தளம் இன்னும் வலுவாகவே உள்ளது. 2026இல் விஜய்யின் வெற்றி என்பது அவர் அமைக்கும் கூட்டணி மற்றும் அவர் முன்வைக்கும் அரசியல் கொள்கையைப் பொறுத்தே அமையும் என்பதே நிதர்சனம்.


Related Link
விருதுநகரில் சந்திப்போம் - முதல்வர் அழைப்பு

விருதுநகரில் சந்திப்போம் - முதல்வர் அழைப்பு

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 4 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved