ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்துள்ளன. பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உக்ரைன் ஆதரவு நாடுகளின் அமைப்பான ‘உக்ரைன் பாதுகாப்பு தொடா்புக் குழு’ மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.