news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026-27
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026-27

நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு உரை

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் என்று, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று பிப்ரவரி 17ஆம் தேதி, தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
அவர் பேசியதாவது;
தமிழ்நாட்டின் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம். இதன் ஒரு பகுதியாக ஏற்றுமதியை பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.

வறுமை ஒழிக்கும் போர்
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை தொடங்கியுள்ளோம் என்றார்.

பின்பற்றும் பிற மாநிலங்கள்...
திருக்குறளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதாக தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் சட்டப்பேரவையில் பகிர்ந்துகொண்டார்.
பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழைப் பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்றும் கூறினார்.

இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

ஆண்டு தோறும் பிப்ரவரி மாத இறுதி அல்லது மாா்ச் மாத முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி - கனிமொழி குற்றச்சாட்டு

6
3 mins agoshare
மக்களவையில் கனிமொழி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved