Also Watch
Read this
By: Manigandan Raja
அரசியல் நாகரிகமின்றி தவெக தலைவர் விஜயை, பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரம் விமர்சித்துள்ளார். நடிகை திரிஷா பெயரை குறிப்பிட்டு விமர்சித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

நயினாருக்கு தவெக கண்டனம் - நிர்மல்குமார்
கடைசி வரை அரசியல்வாதியாக முயற்சி செய்து கொண்டிருக்கும் நபராகவே இருப்பார் நயினார் நாகேந்திரன் என்றும், விஜய் குறித்து நாகரீகமின்றி விமர்சித்ததை சுட்டிக்காட்டி சிடிஆர் நிர்மல்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடிப்படை அறிவை இழந்துவிட்டார் நயினார் - நாஞ்சில் சம்பத்
எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார் என்றும், கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா? என்றும் நாஞ்சில் சம்பத் காட்டமாக தெரிவித்துள்ளார்.

நயினாருக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
நடிகை திரிஷாவை குறிப்பிட்டு தவெக தலைவர் விஜயை விமர்சித்த நயினார் நாகேந்திரனுக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல என்றும் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved