news-tamil-logo

3/22/2026, 8:46:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews உச்சம் தொட்ட தங்கம் விலை
tv

Also Watch

tv

Read this

உச்சம் தொட்ட தங்கம் விலை

ஒரு கிராம் ரூ.15,000ஐ கடந்தது

Posted on: Jan 26, 2026 05:05 AM

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஜனவரி 26ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 15,000 ரூபாயை கடந்து விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்
சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று காலை, ஒரு கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025க்கு விற்​பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1.20,200க்கு விற்பனை ஆனது.

புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி ஒரு கிரா​முக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.375க்​கும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ரூ.3,75,000க்​கும் விற்பனை ஆனது.

வாடிக்கையாளர்கள் கலக்கம்
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 91.63 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இத்துடன், சர்வதேச அரசியல் சூழல்களின் எதிரொலியாக, பாதுகாப்பு கருதி, தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் புதிய உச்சத்துக்கு காரணம். இதனால், ஏழை, எளிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


தொடர்ந்து ஏறு முகத்தில் தங்கம்

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்​களாகவே தங்​கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரு​கிறது.

Related Link
தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

               
             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கர” திரைப்படம்

0
2 mins agoshare
Kara








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved