தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் வரும் 28 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக மாநாடு அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. அதிகாலை 4 மணியளவில் தொடங்கிய பூஜையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பூஜித்து வழிபாடு செய்தார். பின்னர், தொண்டர்களின் கோஷத்திற்குமத்தியில், பந்தக்கால் நடப்பட்டது.