சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 320 ரூபாய் சரிவு. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 91,680 ரூபாய்க்கு விற்பனை.சென்னையில், ஒரு கிராமுக்கு 4 ரூபாயும், ஒரு கிலோவுக்கு 4,000 ரூபாயும் குறைந்தது வெள்ளி விலை.ஒரு கிராம் வெள்ளி 169 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 69,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. நேற்றைய நிலவரம்...நேற்று நிலவரப்படி, தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 92 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 173 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.