கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்ற நிகழ்ச்சியில், பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. தக் ஷிண கன்னடா மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார். இந்நிலையில், காலையிலிருந்தே அவ்விடத்திற்கு வந்திருந்த பெண்கள் உணவு, தண்ணீர் இன்றி வெகுநேரம் காத்திருந்ததால் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். 10 பெண்கள் மயங்கிக் கீழே விழுந்த நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.