குருகிராமில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதன் காரணமாக, டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. குருகிராமில் நேற்று மாலை 4 மணி நேரத்தில் மட்டும் 100 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் முக்கிய சாலைகள் உள்பட பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரமாக வாகனங்கள் நகரக்கூட முடியாத அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டது.