இண்டிகோ விமானத்தில் விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போதை பயணியை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் ஷீரடிக்கு சென்ற இந்த விமானத்தில், போதையில் இருந்த பயணி, விமான கழிவறைக்கு அருகே வைத்து விமானப் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், விமானப் பணிப்பெண் அலறியதை அடுத்து இதர ஊழியர்கள் விரைந்து வந்து அவரை காப்பாற்றியதாகவும் தெரிகிறது. விமானம் ஷீரடியில் இறங்கியதும், இது குறித்து அங்குள்ள ரஹாத்தா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.