பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பேட்டியளித்தற்காகவும், தடை செய்யப்பட்ட அமைப்போடு தொடர்பில் இருந்ததாகவும் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து சித்ரவதை செய்வதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த மே மாதம் ஹமீத் உசேன், அவரது அப்பாவும் சுவடு மின்னிதழ் ஆசிரியருமான சுவடு மன்சூர், மற்றும் அவரது சகோதரரை சென்னை சைபர் கிரைம் போலீசார் உபா சட்டத்தின் கீழ் கைது செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது மற்றொரு சகோதரர் ஃபைசல் உசேனையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை என்ற பேரில் கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ.ஏ தாக்கி துன்புறுத்துவதாகவும் கைதானவர்களை காண உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.