வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக வயநாடிற்கு வருகை தந்துள்ளார். ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரியங்காவுக்கு, காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரியங்கா காந்தி இன்றும்- நாளையும் வயநாட்டில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மீனங்காடி பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் பிரியங்கா், மானந்தவாடி பகுதியிலும் அதைத்தொடர்ந்து, திருவம்பாடி, ஏர்நாடு, நிலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளையும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.