ஆந்திர மாநிலம், பி.ஆர்.அம்பேத்கர் மாவட்டத்தில் மதுபோதையில் பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கோண்டா என்ற முதியவரை நாகப்பாம்பு கடித்ததாக தெரிகிறது. மதுபோதையில் இருந்த முதியவர் பாம்பை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டார். பிறகாக அக்கம் பக்கத்தினர் பாம்பை கீழே போட வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.