Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 01:56 PM
By: Manigandan Raja

550-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு :
ஈரானில் சிக்கித்தவித்த 550-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆர்மீனியா வழியாக பத்திரமாக மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அங்கிருந்து தாயகம் திரும்ப விரும்புவோர் ஆர்மீனியா அல்லது அஜர்பைஜான் வழியாக செல்லுமாறு இந்திய துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த சூழலில், சமீபத்தில் ஈரானுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட 284 பேர் மற்றும் அந்நாட்டில் படித்த மாணவர்கள் 90 பேர் உட்பட 550-க்கும் மேற்பட்டோர் ஆர்மீனியா எல்லை வழியாக ஈரானில் இருந்து வெளியேறினர். அஜர்பைஜான் வழியாகவும் 90 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved