இந்தியாவின் பின் தங்கிய பகுதியாக கருதப்பட்ட கிழக்குப் பகுதியை, தாம் நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற "ஒடிசா பர்பா" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய அரசு அமைந்த 100 நாட்களுக்குள் ஒடிசா மாநிலத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் ஒடிசாவிற்கு தற்போது ஒதுக்கும் பட்ஜெட் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகம் என குறிப்பிட்ட அவர், ஒடிசாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு துறையிலும் வேகமாக பணியாற்றி வருவதாக கூறினார்.