ஜம்மு காஷ்மீரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமித் ஷா ஆய்வு நடத்தினார். ஜம்முவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.