டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே நிலை குலைய வைத்தது. இந்த விவகாரத்தில் இரண்டாம் தர கருத்துக்களை கூற விருப்பம் இல்லை எனவும், குற்றவாளிகள் மீது மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் எனவும் சசி தரூர் நம்பிக்கை தெரிவித்தார். வரும் காலங்களில் இது போன்ற பயங்கரவாத தாக்குதல் நிகழாத வண்ணம், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.