Also Watch
Read this
By: Manigandan Raja

கடந்த ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹரியானாவின் அல் பலாஹ் பல்கலையின் 140 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை, அதன் வேந்தர் ஜாவத் அகமது சித்திக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பல்கலையை நிர்வகிக்கும் அல் பலாஹ் அறக் கட்டளை, மாணவர்களிடம் சட்டவிரோதமாக நிதி வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.
பல்கலை வேந்தர் ஜாவத் அகமது சித்திக் வீடு உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 415 கோடி ரூபாய் முறைகேடாக பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved