news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஈரோட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்
tv

Also Watch

tv

Read this

ஈரோட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Congress dk sivakumar

கர்நாடக துணை முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம் : 

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனைஆதரித்து, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இன்று ஈரோடு சம்பத் நகர் நான்கு சாலை சந்திப்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தனது பேச்சைத் தமிழில் ‘வணக்கம்’ எனத் தொடங்கிய கூறிய டி.கே. சிவகுமார், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடந்த ஐந்தாண்டு காலப் பணிகள் வெற்றிகரமாக கட்டமைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் நல்லாட்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று வாக்கு கேட்க வந்துள்ளேன்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த வெற்றிகரமான கூட்டணியை மிகச் சிறப்பாகக் கட்டமைத்துள்ளார். ஜனநாயகத்தைக் காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவர் வரலாறு முக்கியம் என குறிப்பிட்ட அவர் கனவுகள் மட்டுமே கொண்டு, அரசியல் வரலாறு இல்லாமல் வரும் புதிய கட்சிகள் நீண்ட காலம் நிலைக்காது."

தன்னை எம்.ஜி.ஆராகச் சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால், விஜய் தன்னை எம்.ஜி.ஆர் ரோடு ஒப்பிடுவது சாத்தியமற்றது. மக்கள் தலைவர்களைத் திரையில் தேடாமல் தரையில் தேட வேண்டும். மத்திய அரசின் கீழ் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்துப் பேசிய அவர்,சிமெண்ட், கேஸ் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எளிய மக்களுக்கான மற்றும் தொழில்துறைக்கான அரசு விரைவில் அமையும். மேலும், கடந்த கால அதிமுக அரசு திட்டங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல் கட்டமைப்பையும், அவரது வழிகாட்டுதலில் இயங்கும் இந்த மகத்தான கூட்டணியும் செந்தில் பாலாஜி மற்றும் சபரீசன் போன்றவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு களப்பணியாற்றி வருகின்றனர்.

ராகுல் காந்தி மற்றும் கார்கே ஆகியோர் விரைவில் தமிழகத்திற்குப் பிரச்சாரம் செய்ய வர உள்ளனர். இந்திரா காந்தி அவர்கள் வழங்கிய 'கை' சின்னத்தை ஆதரித்து, காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பனைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மறைந்த இளங்கோவன் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை வேட்பாளர் சிறப்பாகத் தொடர்வார் என்றார்.

Related Link
மீனவர் வலையில் சிக்கிய பெரிய புள்ளி சுறா மீன்

மீனவர் வலையில் சிக்கிய பெரிய புள்ளி சுறா மீன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
1 hr 51 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved