news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கையில் தாமரை உடன் பிரதமர் மோடி ரோடு ஷோ
tv

Also Watch

tv

Read this

கையில் தாமரை உடன் பிரதமர் மோடி ரோடு ஷோ

நாகர்கோவிலில் பிரதமர் மோடி...

26

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கையில் தாமரை உடன், நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்று, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

அடுத்த வாரம் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பிரதமர் மோடி வருகை

இதற்காக, டெல்லியில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார், பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதிக்கு வந்தார். அங்கிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை, சுமாராக 1 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ சென்று, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டினார்.

பிரதமருடன் இபிஎஸ் ரோடு ஷோ

நாகர்கோவிலில் வேப்பமூடு தொடங்கி, வடசேரி வரை பிரதமர் ரோடு ஷோ சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பிரதமரின் ரோடு ஷோவில் பங்கேற்றனர்.


Related Link
சென்னையில் விஜய் பிரச்சாரம், குவிந்த தொண்டர்கள்

சென்னையில் விஜய் பிரச்சாரம், குவிந்த தொண்டர்கள்

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
10 hrs 18 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved