புறப்படும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் ட்ரீம் லைனர் ஏஐ 2017 விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது. வழக்கமான நடைமுறைகளின்படி அந்த விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்த நிறுவன செய்திதொடர்பாளர், விரைவில் மாற்று விமானம் மூலம் பயணிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 12ம் தேதி ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த போயிங் விமானம் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய சிறிது நேரத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.